மத்தியப் பிரதேசம் போபாலில் 111 ரூபாயை எட்டிய பெட்ரோல் விலை ; டீசல் விலை ரூ. 100

0 2335
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 111 ரூபாயையும், டீசல் விலை நூறு ரூபாயையும் எட்டியுள்ளது.

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 111 ரூபாயையும், டீசல் விலை நூறு ரூபாயையும் எட்டியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நான்காம் நாளாக உயர்த்தியுள்ளன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலை 30 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 102 ரூபாய் 39 காசுகளாகவும் மும்பையில் 108 ரூபாய் 43 காசுகளாகவும், சென்னையில் 100 ரூபாயாகவும் உள்ளது.

ஒரு லிட்டர் டீசல் விலை டெல்லியில் 90 ரூபாய் 77 காசுகளாகவும், மும்பையில் 98 ரூபாய் 48 காசுகளாகவும், சென்னையில் 95 ரூபாய் 31 காசுகளாகவும் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments