வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 2907
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளைய தினம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, மதுரை, ஈரோடு, விருதுநகர், திருச்சியில் கனமழையும் பெய்யக்கூடும்.

5,6 ஆகிய தேதிகளில் டெல்டா உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments