மழை பெய்ய வேண்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்திய வழிபாடு, 101 ஆடுகளை பலியிட்டு அம்மனுக்கு படையல்

0 3929

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, மழை பெய்ய வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்று 101 ஆடுகளை பலியிட்டு வினோத வழிபாடு நடத்தினர்.

முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் அங்குள்ள எல்லை பிடாரி அம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு அந்த கிராமத்திலுள்ள சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைத்து ஆண்களும் ஒன்று கூடி அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று அங்கு மண் பீடத்தில் எல்லை பிடாரி அம்மன் உருவத்தை வடிவமைத்து வழிபட்டனர்.

101 ஆடுகளை பலியிட்டு பூஜைகள் செய்து, பச்சரிசியில் உணவு சமைத்து அம்மனுக்கு படையலிட்டனர். பின்னர், காலையில் திருவிழாவில் பங்கேற்ற அனைத்து ஆண்களுக்கும் கறி விருந்து பிரசாதமாக பரிமாறப்பட்டது.

இதில், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments