கொள்முதல் நிலையங்களில் பழைய முறையிலும் நெல் விற்பனை செய்யலாம், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு

0 1657

விவசாயிகள் குறுவை நெல்லை பழைய நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இணைய வழியிலோ, ஏற்கெனவே இருந்த நடைமுறையிலோ நெல்லை விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 2021-22 காரீப் பருவம் துவங்கும் அக்டோபர் 1 முதல் இணையதளங்களில் பதிவுசெய்து கொள்முதல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பழைய நடைமுறையிலும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய முறைப்படி நெல் விற்க விரும்புபவர்களிடம் ஆவணங்களை சரிபார்த்து அதன்படி குறுவை நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments