மும்பை கடலோரச் சாலை அமைக்கும் திட்டம், ரூ. 1600 கோடி ஊழல் என பாஜக குற்றச்சாட்டு

0 2020

மும்பையில் கடலோரச் சாலைத் திட்டத்தில் 1600 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் மாநகராட்சி அதை மறுத்துள்ளது.

மும்பை நாரிமன் முனை முதல் காந்திவாலி வரை கடலோரச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஆலோசகர்களுக்கான கட்டணம் வழங்கியதிலும், கடலோரத்தில் பாறைகள் கற்களைப் போட்டு நிரப்புவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜகவின் ஆசிஷ் சேலார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள மும்பை மாநகராட்சி 2020 டிசம்பர் வரை 683 கோடி ரூபாய் அளவுக்கே பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், 1600 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறுவது தவறானது என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments