ஈரோடு மாவட்டம் பவானி அருகே, மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து... ரூ.10 கோடி மதிப்பிலான 200 டன் மஞ்சள் எரிந்து சேதம்

0 2029

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 200 டன் மஞ்சள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திர குமார் அகர்வால், சஞ்சய் குமார் அகர்வால் இருவருக்கும் சொந்தமான, சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான மஞ்சள் குடோன் பெரியபுலியூரில் உள்ளது.

 நேற்று குடோனில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று விட்ட நிலையில்,  இரவு 10 மணிக்கு பலத்த சத்தத்துடன் மஞ்சள் குடோன் மீது இடி விழுந்ததாகவும், மின்சார வயரில் தீப்பிடித்து சுவிட்ச்பெட்டிகள், மின்சார மீட்டர் பெட்டிகள் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.

மஞ்சள் மூட்டைகளும் தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், நள்ளிரவில் பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், ஈரோட்டில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

சுற்றிலும் சுமார் 30 அடி உயரத்திற்கு குடோன் சுவர் இருந்ததால், ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுவர்கள் இடிக்கப்பட்டு தீ அணைக்கும் பணி தொடங்கியது. விடிய விடிய கொளுந்து விட்டு எரிந்த தீ, பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு இன்று காலையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments