காத்துவாக்குல ரெண்டு காதலால் விவாகரத்து.. சமந்தா நிபந்தனையால் பிரிந்த கணவன்..!

0 17115

நடிகை சமந்தா - கணவர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சுமூகமாக பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக தான் நடித்துவரும் படங்களை கைவிட மறுத்த சமந்தா, காதல் கணவனை கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து திருமண வரவேற்பு பெண்ணாக வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா. திரை உலகில் நுழைந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் முன்னனி நடிகையானார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டதால், தெலுங்கு திரைஉலகின் பாரம்பரியமான நடிகர் நாகார்ஜூனா அக்கினேனி குடும்பத்து மருமகளானார்.

திருமணத்துக்கு பின்னரும் சமந்தாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்ததால் தொடர்ந்து படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வந்தார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இருவரும் சுமூகமாக பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்றும் சமந்தாவுக்கு தொடர்ந்து தங்கள் குடும்பத்தின் ஆதரவு உண்டு என்றும் நாகர்ஜூனா டுவிட் செய்துள்ளார்.

சமந்தாவை நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டபோதே அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், கைவசம் உள்ள 7 படங்களை மட்டுமே நடித்து முடித்து விடுவதாக சமந்தா கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி நடக்காமல், தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு சமந்தா நடித்து வந்ததால், நாக சைத்தன்யா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்தும் அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் பக்குவத்துக்கு சமந்தா வராததால் குடும்பத்திலும் புகைச்சல் கிளம்பியதாக தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள சமந்தா சில நிபந்தனைகளை விதித்ததோடு நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் அவர்களுக்கிடையே விரிசல் அதிகரித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் நடிக்க நாகசைதன்யா தடை போட்டதாகவும், அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை உருவானதாக கூறப்படுகின்றது.

திரை உலகில் இப்படிப்பட்ட பேச்சுகள் அடிபட்டாலும், தன் திறமை மற்றும் உழைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை உள்ளதால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் வேண்டாம் என்றும் விவாகரத்துக்கு பின்னரும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கெத்தாக கூறி சமந்தா, கணவர் நாகசைதன்யாவை பிரிந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் சமந்தாவின் நண்பர்கள்..!

சாதாரண குடும்பத்து பெண்ணான சமந்தா, அக்கினேனி குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளை ஏற்காததால் இறுதியில் மணவாழ்க்கையில் முறிவு ஏற்பட்டதாக விபரம் அறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிரிந்தாலும் நட்பாக பழகுவது நடிகர் நடிகைகளுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை, திரைக்கு பதில் நிஜத்தில் நடிக்கவேண்டியது தான்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments