ஒரு வீட்டில் பற்றிய நெருப்பால் தீக்கிரையான 40 வீடுகள்

0 2390
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வீடுகள் எரிந்து நாசமாகின.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 வீடுகள் எரிந்து நாசமாகின. குவானாஜா தீவில் நேற்று காலை திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தினால் நெருப்பு மற்ற வீடுகளுக்கும் பரவியது.

இதனைத் தொடர்ந்து நெருப்புப் பற்றிய வீடுகளில் இருந்த 400க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து ஹோண்டுராஸ் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் நெருப்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments