குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, 60 வயது மூதாட்டியிடம் 6 சவரன் நகை கொள்ளை

0 7126

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 60 வயது பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து 6 சவரன் தங்க நகைகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா நகரைச் சேர்ந்த அலமேலு என்பவர் கடந்த 25ஆம் தேதி மேல்மருவத்தூர் செல்வதற்காக வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, அவரை ஏமாற்றி காரில் அழைத்து சென்று ஒரு கும்பல் கைவரிசை காட்டியது.

மயக்கமடைந்த அலமேலுவை பெரியபாளையம் அருகே சாலையோரம் கீழே இறக்கி போர்வையை போத்தி படுக்க வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

2 நாட்களுக்கு பின் மயங்கம் தெளித்த அலமேலு, இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி உதவியுடன் தந்தை, மகன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments