இன்று முதல் நெல் கொள்முதல் செய்யப்படும்...அரசின் அறிவிப்பால் கைவிட்ட விவசாயிகள் போராட்டம்

0 1682

இன்று முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஹரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி ஹரியானா முதல் அமைச்சர் மனோகர்லால் கட்டார் வீட்டின் முன்னர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அத்துமீறிய விவசாயிகள் கற்களை வீசி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். இவர்களைத் ததண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டினர்.

கடந்த இரண்டு நாட்களாக போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீசார் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக வரும் 11-ஆம் தேதி வரை பஞ்சாப், ஹரியானா விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்க மாநில அரசுகள் மறுத்து வந்ததால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments