தமிழகம் முழுவதும் இன்று 4வது  மெகா தடுப்பூசி முகாம்..!

0 2097

தமிழகம் முழுவதும் இன்று 4வது  மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. கடந்த 19 ஆம் தேதி இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமும், கடந்த 25 ஆம் தேதி மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமும் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும் நான்காவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 தடுப்பூசி முகாம்கள் செயல்பட உள்ளன. தற்போது, தமிழக அரசிடம் 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments