மெரினா கடலில் குளித்த கல்லூரி மாணவன் மாயம்...!

0 1873

சென்னை மெரினாவில் கடலில் குளித்த போது மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல் குமார் தனது நண்பர்களுடன் மெரினா கடலில்  குளித்து கொண்டிருந்தார். அப்போது வந்த ராட்சத அலை நிர்மல் குமாரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து நிர்மல் குமாரை ரப்பர் படகில் சென்று தேடினர். இது தவிர நீச்சல் வீரர்கள் நிர்மல் குமாரை மாலை வரைத் தேடியும் கண்டுப்பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பினர். இதே போல், வெள்ளிக்கிழமை மெரினா கடலில் சிக்கி மாயமான பாலிடெக்னிக் மாணவர் மறு நாள் சடலமாக மீட்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments