சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்து திருமணம் செய்து ஏமாற்றிய பூசாரி போக்சோ சட்டத்தில் கைது

0 7358
சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்து திருமணம் செய்து ஏமாற்றிய பூசாரி போக்சோ சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்து, பின்னர் திருமணம் செய்து ஏமாற்றிய பூசாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

நந்தம்பாக்கம் அம்மன் கோயில் பூசாரி ஒருவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது அண்ணன் மனைவியின் 15 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இது சிறுமியின் வீட்டிற்கு தெரிந்ததை அடுத்து அவரை கட்டாய திருமணம் செய்துகொண்டார். பின்னர் சிறிது நாட்களில் அந்த சிறுமியை வீட்டை விட்டு துரத்திய பூசாரி மற்றும் அவரது பெற்றோர், பூசாரிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அக்காவின் வாழ்க்கையை நினைத்து பயந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பூசாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள அவரது குடும்பத்தாரை தேடிவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments