ஐ.பி.எல் கிரிக்கெட் - மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி...!

0 1717

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி, டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் அவேஷ் கான் 4 ஓவரில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

எளிய இலக்கை சேஸ் செய்த டெல்லி அணி 30 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆடி 33 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments