கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக , அதிமுகவினர் இடையே கைகலப்பு

0 2253

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உஷா தலைமையில் சித்தூர் நத்தம் கிராமத்தில் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த அதிமுக ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார் தன்னை ஏன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என கேள்வி எழுப்பிய நிலையில், ஊராட்சி தலைவர் உஷாவின் கண்வர் ஸ்ரீதர்,  சிவக்குமாரை தள்ளிவிட்டுள்ளார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே  கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments