12ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை போலி இன்ஸ்டா ஐ.டி.க்கு பயன்படுத்திய நபர் கைது

0 2515

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி, 12ஆம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை டி.பி.யாக பயன்படுத்தியதோடு, அந்த மாணவிக்கே ஆபாச சேட்டிங் செய்து தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்தும் செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். மாணவி இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை எடுத்து  Cracy - queen- keerthi என்ற பெயரில் போலி கணக்கு துவங்கி மணலியைச் சேர்ந்த கலைச் செல்வன் என்பவன் பயன்படுத்தி வந்துள்ளான்.

மேலும், அந்த மாணவிக்கே ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததால் கைது செய்யப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments