சமந்தாவும் தானும் விவாகரத்து செய்ய உள்ளதாக நடிகர் நாக சைதன்யா அறிவிப்பு

0 37119
சமந்தாவும் தானும் விவாகரத்து செய்ய உள்ளதாக நடிகர் நாக சைதன்யா அறிவிப்பு

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை, நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,  இருவரும் பிரிவது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளதாகவும், நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் தங்களை ஆதரிக்குமாறும் கூறியுள்ளனர். தங்களுக்கு சுதந்திரம் கொடுத்து, பிரைவசியை மதித்து, இதனை எளிதாக கடந்துபோக உதவுங்கள் என்றும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments