பாக்கியலஷ்மி டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை...!

0 8060

சென்னையில் பாக்கியலட்சுமி டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், குடும்பத்தினரை படுக்கை அறையில் வைத்து பூட்டிவிட்டு, 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 14லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், பாக்கியலஷ்மி என்ற பெயரில் பல பேருந்துகளை வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு, இளங்கோவன், அவரது மனைவி சசிகலா, மகன் ஹரிஹரன் ஆகிய மூன்று பேரும் வழக்கம்போல் வீட்டின் மேல் தளத்திலிருந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து கதவை திறக்க முயன்ற போது, படுக்கை அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டியிருந்தது.

அதிர்ச்சியடைந்த இளங்கோவன் குடும்பத்தினர், ஜன்னல் வழியாக கூச்சலிட்டு, அவ்வழியாக சென்ற பால்காரர் உதவியுடன் அறையின் கதவை திறந்திருக்கின்றனர். வெளியே வந்து பார்த்த போது, மேல் தளத்தில் இருந்த மற்றொரு அறை மற்றும் கீழ் தளத்தில் இருந்த அறைக் கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு தங்கம், வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இளங்கோவன் அளித்த தகவலின் பேரில் நேரில் வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 100சரவன் தங்க நகைகளும், 14 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும், 4லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் எப்படி உள்ளே வந்தனர்? எப்படி கொள்ளை அடித்தனர் என விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments