இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கியா நிறுவனம் 14,441 வாகனங்கள் விற்பனை.. முந்தைய ஆண்டைவிட 23 விழுக்காடு வீழ்ச்சி

0 2753

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கியா நிறுவனத்தின் வாகன விற்பனை முந்தைய ஆண்டைவிட 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

கியா இந்தியா நிறுவனம் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் 18 ஆயிரத்து 676 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் அதைவிட 23 விழுக்காடு குறைவாக 14 ஆயிரத்து 441 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகக் கியா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் செமி கண்டக்டர் தட்டுப்பாட்டால் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். விழாக்காலத்தில் செமி கண்டக்டர் கொள்முதலில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், அதன்பின் உற்பத்தி அளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments