எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா படையினரைக் குவித்துள்ளதால் பதற்றம்...தயார் நிலையில் இந்திய ராணுவம்

0 13261

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் கே9 வஜ்ரா வகைப் பீரங்கிகளைப் பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன ராணுவம் பெருமளவில் படையினரைக் குவித்துள்ளதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம், விமானப்படை ஆகியன தயார் நிலையில் உள்ளன.

ராணுவத்தின் கே9 வஜ்ரா வகையைச் சேர்ந்த பீரங்கிகளை அப்பகுதியில் இயக்கி ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இடிமுழக்கம் எனப் பெயர்கொண்டுள்ள இவ்வகைப் பீரங்கிகள் 18 கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள இலக்குகளைக் குண்டுகளால் தாக்கும் திறன்பெற்றவையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments