நாட்டின் 122 நகரங்களில் 166 ஆதார் சேவை மையங்களைத் திறக்கத் திட்டம்

0 3127

நாட்டின் 122 நகரங்களில் 166 ஆதார் சேவை மையங்களைத் திறக்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆதார் பதிவு, திருத்தம், விவரங்கள் சேர்ப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக நாட்டின் பல்வேறு நகரங்களில் இப்போது 55 சேவை மையங்கள் உள்ளன. இது போக வங்கிகள், அஞ்சலகங்கள், மாநில அரசு அலுவலகங்களில் 52 ஆயிரம் ஆதார் பதிவு மையங்களும் உள்ளன.

இந்நிலையில் 122 நகரங்களில் 166 ஆதார் சேவை மையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இவற்றில் ஏ வகை சேவை மையங்கள் ஒரு நாளில் ஆயிரம் பதிவுகளும், பி வகை சேவை மையங்கள் 500 பதிவுகளும், சி வகை சேவை மையங்கள் 250 பதிவுகளும் செய்யும் திறனுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 130 கோடியே 95 இலட்சம் பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments