டிஎன்ஏ பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது தனிநபர் சுதந்திரம், அந்தரங்கம் பேணும் உரிமையிலும் தலையிடும் செயல் உச்சநீதிமன்றம்

0 1866

டிஎன்ஏ எனப்படும் மரபணு பரிசோதனை நடத்த கட்டாயப்படுத்துவது தனிநபர் சுதந்திரத்திலும், அந்தரங்கம் பேணும் உரிமையிலும் தலையிடும் செயல் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

திரிலோக் சந்த் குப்தா-சோனாதேவி என்ற தம்பதி மறைந்துவிட்ட நிலையில், அவர்களது மகனான தனக்கு சொத்துகளில் பங்கு தரக் கோரி அசோக்குமார் என்ற நபர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

தங்கள் பெற்றோரின் பிள்ளைதான் அசோக்குமார் என நிரூபிக்க, அவருக்கு மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என திரிலோக் சந்த் குப்தா-சோனாதேவியின் மகள்கள் வாதிட்டனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசோக்குமார், தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக வேறு பிற ஆவணச் சான்றுகளை வழங்கியிருப்பதாகக் கூறினார். இதையடுத்து, உறவுமுறைகள் தொடர்பான சர்ச்சைகளில், நிரூபணத்திற்கு பிற சான்றுகள் இருக்கும்போது, ரத்த பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுவது வழக்கமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments