கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகையின் பெற்றோர் புகார்

0 2665

கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சௌஜன்யாவின் ஆண் நண்பரும், சக நடிகருமான விவேக்கை விசாரிக்கக் கோரியும் நடிகையின் பெற்றோர் புகாரளித்திருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சௌஜன்யா கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டில் இருந்து தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என 4 பக்கங்கள் கொண்ட தற்கொலை குறிப்பும் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில், தனது மகளின் செல்போன் மாயமாகியிருப்பதாகவும், அவரது மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என நடிகையின் தந்தை புகாரளித்துள்ளார்.

சௌஜன்யாவின் நண்பரான விவேக்கையும், அவரது உதவியாளர் மகேஷையும் விசாரிக்க வேண்டும் என அவர் புகாரில் வலியுறுத்தியிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளும்படி சௌஜன்யாவை நடிகர் விவேக் வற்புறுத்தி, சித்திரவதை செய்திருக்கக் கூடும் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments