சென்னை வில்வித்தை வீராங்கனை சிறுமி சஞ்சனாவுக்கு, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வில்-ஐ வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 1817

வில் வித்தை வீராங்கனை சிறுமி சஞ்சனாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வில்லை வழங்கினார்.

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி சஞ்சனா, இதுவரை 5 முறை உலக சாதனை செய்துள்ளார். சிறு வயதிலேயே மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ள, சிறுமி சஞ்சனா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவரை ஊக்குவிக்கும் வகையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வில்லினை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments