ஐபிஎல்-ல் இன்று 2 போட்டிகள்: மும்பை -டெல்லி, சென்னை - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

0 3832

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், இன்று இரவு நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை அணி ஏற்கன்வே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ராஜஸ்தான் அணி இனி வரும் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற முடியும். இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல் பிற்பகல் 3.30 மணிக்கு சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு லீக் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய மும்பை அணி இனி வரும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments