எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து நான்கே நாட்களில் விவாகரத்து செய்த நபர்... காரணம்?

0 4002

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரை திருமணம் செய்து, பிறகு நான்கே நாட்களில் விவாகரத்து செய்ததாக போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணமகன் போல் உடையணிந்த Khoirul Anam  ரைஸ் குக்கரை மணமகள் போல அலங்கரித்து, அதை திருமணம் செய்து கொண்டதாக ஃபேஸ்புக்கில் பல படங்களை பகிர்ந்தார். ரைஸ் குக்கர் வெள்ளையானதாகவும், அன்பானதாகவும் , நன்றாக சமைக்கும், சொல்வதை கேட்டு நடக்கும் விதமாக இருப்பதாலும், அதை மணந்ததாக Khoirul பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 4 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பதிவு போட்ட Khoirul, வெறும் அரிசி சாதத்தை மட்டுமே அந்த ரைஸ் குக்கர் சமைப்பதால் அதை விவாகரத்து செய்வதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments