ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தாலிபன்கள் துப்பாக்கிச் சண்டை

0 2016
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தாலிபன்கள் துப்பாக்கிச் சண்டை

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பார்வான் மாகாணத்தில் உள்ள சாரிக்கர் நகரில் தாலிபன் படைகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சில தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 169 ஆப்கான் மக்களும் 13 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments