அடங்கா பெண் வயல் காட்டில் கவுரவ கொலை..! இரு சகோதரர்கள் கைது

0 6671
அடங்கா பெண் வயல் காட்டில் கவுரவ கொலை..! இரு சகோதரர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே. கணவரைப் பிரிந்து வாழ்ந்த, தங்கள் வீட்டு பெண்ணின் தடம் மாறிய வாழ்க்கைப் பயணத்தால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர், வயல்காட்டுக்கு அழைத்துச்சென்று பெண்ணை தீர்த்துக் கட்டியதாக கூறப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தொப்படைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதி மகள் அழகேஸ்வரி. 30 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது கணவர் குருசாமியுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் மகள் அழகேஸ்வரியை தனது வயலில் வைத்து வெட்டி கொலை செய்ததாக அவரது தந்தை ஆதி ப.கோவிலான்குளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ஆனால் கொலை நடந்த இடம் பேரையூர் காவல் நிலையத்துக்குட்பட்டது என்பதால் போலீசார் அவரை, பேரையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கிருந்த தடயங்களை சேகரித்த போது ஒன்றும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து அழகேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது.

அழகேஸ்வரியின் தந்தை ஆதியிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை சம்பவத்தின் பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. 10 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழும் தனது மகள் அழகேஸ்வரியின் நடத்தை நாளுக்கு நாள் மோசமானதால் பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை என்று கூறப்படுகின்றது. அழகேஸ்வரிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ஊரில் எல்லோரும் தனது மகளின் நடத்தை குறித்து தவறாக பேசியதால் தனது மகன்களிடம் இது பற்றி கூறியதாகவும், அவர்களின் யோசனைப்படி குடும்ப கவுரவத்தை காக்க மகளை கொலை செய்வது என முடிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று காலையில் வயலில் வேலை இருப்பதாக கூறி அழகேஸ்வரியை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் வயலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து தனது மகன்கள் இருவரும் சகோதரியை கொலை செய்ததாகவும் , தனது மகன்கள் மீது கொலை வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே போலீசில் சரண் அடைந்ததாகவும் ஆதி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அழகேஸ்வரியின் உடன் பிறந்த தம்பிகள் வினோத்குமார் அரசகுமார் ஆகிய இருவருடன் கொலைக்கு உடந்தையாக இருந்த தந்தை ஆதியையும் சேர்த்து காவல்துறையினர் கைது செய்தனர். தவறான நடத்தையால் குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்குவதற்காக குடும்பமே சேர்ந்து தங்கள் வீட்டு பெண்ணை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments