ஷாகீன் புயலால் தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 13048

ஷாகீன் புயல் வலுப்பெறுவதால் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் வரும் 4ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஈரான் அருகே நிலைகொண்டுள்ள ஷாகீன் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments