இந்தியாவில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

0 1462

இந்தியா ஏராளமான தொழில் வாய்ப்புகளுடன் திகழ்கிறது என்று சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

துபாய் எக்ஸ்போ-வில் இந்திய வளாகத்தைத்  திறந்து வைத்த பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமில்லை என்று குறிப்பிட்ட மோடி, பொருளாதாரத்தை மீட்க தமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு வந்து இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த எக்ஸ்போவில் இந்திய அரங்குகள் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் அது ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியாவின் நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments