கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுமதி - தேவஸ்தானம்...!

0 2759

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

இலவச மற்றும் கட்டண தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு வரும் போது கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்திருந்தது.

அந்த விதிமுறை தற்போது அமலுக்கு வந்திருப்பதால்,  உரிய சான்றிதழ் வைத்திருக்கிறார்களா என்று சரிபார்த்த பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments