நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி - அன்புமணி ராமதாஸ்

0 4069
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாமக தனித்து போட்டியிட்டாலும், தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருவதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments