பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை ; புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

0 3537
பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை ; புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

பெற்ற தாயை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த மகனுக்கு, தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், தந்தையின் சொத்தை தனது பெயருக்கு எழுதி தராத ஆத்திரத்தில் தனது தாய் திலக ராணியை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொன்றான். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், குற்றவாளி ஆனந்திற்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments