வால்ட் டிஸ்னி வெளியிட்ட 'பிளாக் விடோ' மார்வெல் வரிசை திரைப்படத்தின் இடையிலான வழக்கு சமரசத்தில் முடிந்தது...!

0 2876

வால்ட் டிஸ்னி தயாரித்த பிளாக் விடோ படத்தின் நாயகி ஸ்கார்லெட் ஜொஹன்சனுக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனத்துக்கு இடையேயான வழக்கு சமரசத்தில் முடிந்துள்ளது.

ஆனால் அவர்களிடையே முடிவாகியுள்ள சமரச ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் குறித்த தகவல் வெளியிடப்படாத நிலையில் ஸ்கார்லெட்-உடன் இணைந்து மேலும் பல படங்கள் தயாரிக்க ஆவலாக இருப்பதாக டிஸ்னி தெரிவித்துள்ளது . மார்வெல் சூப்பர் ஹீரோ பட வரிசையில் தயாரிக்கப்பட்ட  பிளேக் விடோ,  ஒரே நேரத்தில் திரையரங்கு மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியானது. 

திரையரங்குகளில் வசூலாகும் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தனக்கு வருமானமாக தர ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்,  ஒரே நேரத்தில்  ஒடிடியில் வெளியிட்டதால் தனக்கு கிடைக்கவேண்டிய வருமானம் குறைந்துள்ளதாகவும், வால்ட் டிஸ்னி ஒப்பந்தத்தை மீறியதாகவும் கூறி ஸ்கார்லெட் ஜொஹன்சன் வழக்கு தொடுத்திருந்தார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments