பள்ளி மாணவர்களுடன் நட்புடன் பழகி வரும் பச்சை கிளி

0 2096
பள்ளி மாணவர்களுடன் நட்புடன் பழகி வரும் பச்சை கிளி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பச்சைக் கிளி ஒன்று பள்ளி மாணவர்களுடன் நட்புடன் பழகி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடுதியில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் சிலர் நடந்து செல்லும் போது, அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து அந்த கிளி பறந்து வந்து மாணவர்களின் தோள் அல்லது தலை மீது உட்கார்ந்து கொள்கிறது.

மாணவர்களும் அந்த கிளியுடன் விளையாடியபடியே பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். அதற்கு உணவும் கொடுக்கின்றனர்.

பள்ளிக்குள் மாணவர்கள் சென்றதும் அந்த கிளி தனது இருப்பிடம் நோக்கி பறந்து சென்று விடுகிறது. மீண்டும் மாலையில் பள்ளி விட்டு மாணவர்கள் விடுதிக்கு செல்லும் போது அவர்களுடன் இணைந்து கொள்கிறது.

தினசரி நடந்து வரும் இந்த காட்சிகள் பார்ப்பவர்களிடம் வியப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments