வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம்...!

0 1555

ஹரியானாவில் துணை முதலமைச்சரை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அம்மாநிலத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜாஜர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த துணை முதலமைச்சர் துஷ்யந் சவுதாலாவை கண்டித்து போராட்டம் நடத்த விவசாயிகள் முயன்றனர்.

தடுப்புகளை மீறி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments