கரும்பு விவசாயிகளுக்கு ரூ.39.4 கோடி ஊக்கத்தொகை - தமிழக அரசு

0 1930
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.39.4 கோடி ஊக்கத்தொகை - தமிழக அரசு

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க 39 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 150 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையான அரைவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க 39 கோடியே 40 இலட்ச ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விபரம், ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் நவம்பர் 15ஆம் நாளுக்குள் வழங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments