சென்னையில் மீன்கள் விலை ஏற்றத்தால் மீன் பிரியர்கள் அதிர்ச்சி

0 3455

சென்னை காசிமேட்டில் வரத்து குறைவு காரணமாக மீன் விலை இருமடங்கு அதிகரித்துள்ளதால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

60 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் கடந்த 14ஆம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின் மீன் பிடித்து திரும்பிய மீனவர்களுக்கு வஞ்சிரம், வௌவால், பாறை போன்ற பெரிய வகை மீன்கள் கிடைக்கவில்லை. சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைத்ததால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தடைக்காலம் முடிந்த நிலையில் மீன் வரத்து அதிகமாகவும் குறைவான விலையில் இருக்கும் என  நினைத்து காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்களுக்கு மீன் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சங்கரா, காரைப்பொடி, ஷீலா, கிழங்கா போன்ற சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைத்தன. அந்த வகை மீன்களும் கிலோ 900 ரூபாய் தொடங்கி ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments