ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

0 3702
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு ஏ.டி.ஜி.பி ரவி சிறப்பு அதிகாரியாகவும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக வசதிக்காக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, ஆவடி, தாம்பரம் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி புதிய காவல் ஆணையரகங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அதே துறையில் ஏடிஜிபி பதவியையும் கூடுதலாக வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments