விபத்தில் அடிபட்டு சாலையில் விழுந்து கிடந்த நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் ...!

0 2709

சிங்கப்பூரில் சாலை விபத்தில் சுயநினைவின்றி விழுந்து கிடந்த நபரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றி உள்ளது.

அந்நாட்டின் ஆங் மோ கியோ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது ஃபித்ரி என்ற நபர் மீது வேன் மோதியதில், அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து மயக்கமடைந்தார். அப்போது ஃபித்ரி அணிந்திருந்த ஆப்பிள் சீரிஸ் 4 ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து அவசர உதவி எண்ணிற்கு, அவரது லொகேஷன் உள்ளிட்ட தகவல்கள் அனுப்பப்பட்டது.

ஆப்பிள் சீரிஸ் 4 ஸ்மார்ட் வாட்ச்சில் fall detection எனப்படும் கீழே விழுந்ததை உணரும் தொழில்நுட்பம் உள்ளது. வாட்ச் கீழே விழுந்தது உணரப்பட்டால், அதை அணிந்தவர் நிலை குறித்த கேள்விகள் அதன் திரையில் தோன்றும். அதற்கு பதிலளிக்கப்படவில்லை எனில், அவசர உதவி எண்ணிற்கு ஸ்மார்ட் வாட்ச் தகவல் தெரிவித்துவிடும். இவ்வாறே சுயநினைவின்றி சாலையில் கிடைந்த ஃபித்ரி, ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments