நாமக்கல் அருகே பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்தியபோது, மாணவர்கள் சிலர் கேலி கிண்டலுடன் ஆட்டம்போட்டு சேட்டை

0 22280

நாமக்கல் அருகே, பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பன்னீர் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் வரலாற்றுப் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் சிலர் கேலியான உடல் அசைவை வெளிப்படுத்தி, அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அதை டிக்-டாக் போல எடிட் செய்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.இது குறித்து தலைமையாசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments