பயங்கரவாதிகளின் பாதுகாப்பு இடமாகப் பாகிஸ்தான் விளங்குகிறது - அமெரிக்கா

0 2529

ஆப்கானிஸ்தானுடன் எல்லையைக் கொண்டுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அப்பகுதியில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதில் சம பங்கு உள்ளதாகத் தெரிவித்தார்.

தாலிபான்களுக்குப் புகலிடம் அளிப்பதாகவும், போரில் காயமடைந்த தாலிபான் வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதாகவும் பாகிஸ்தான் மீது கடந்த காலத்தில் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் குற்றஞ்சாட்டின. அதே நிலை இன்றும் நீடிப்பதாகவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments