டெல்டா மாவட்டங்களில் இரு நாட்களுக்கு அதிகனமழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

0 6241

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா உட்பட சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையும், குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனியில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் கனமழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-ந் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில்  அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments