தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு.... 13 வயது மாணவனை சுட்ட அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவன்

0 3198

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளி மாணவனை துப்பாக்கியால் சுட்டு படுகாயமடைச் செய்த அதே பள்ளியைச் சேர்ந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

டென்னிசி மாகாணத்தின் மெம்ஃபிஸ்-ல்  உள்ள கம்மிங்ஸ் எலிமென்டரி பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது. வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பள்ளியில் உள்ள அனைவரும் அருகில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த 13 வயது மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மாணவனை சுட்டுவிட்டு தப்பி சென்றவன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments