ம.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

0 5464

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ம.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் போலீசார் தேடி வருவதை அறிந்து தலைமறைவாக இருந்த நபர் தப்ப முயன்ற போது பள்ளத்தில் விழுந்து கால் முறிவுடன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பீப்பா என்கிற தாஜுத்தீன் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்றதாகவும், போலீசார் வருவது குறித்து அறிந்த பீப்பா 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பீப்பாவை மீட்ட போலீசார் மருத்துவ சிகிச்சை அளித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments