துபாய் எக்ஸ்போ பிரமாண்டத் தொடக்கம்

0 5228

துபாயில் இந்த ஆண்டுக்கான வர்த்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இதையொட்டி நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமான் பயிற்சியில் உருவான மகளிர் இசைக் குழு உள்ளிட்டோர் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். 

கொரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டாக தள்ளிவைக்கப்பட்ட பிரமாண்ட வர்த்தகக் கண்காட்சி துபாயில் தொடங்கியுள்ளது.

இதில் இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ 200 நாடுகள் பங்கேற்று அரங்கங்களைத் திறந்துள்ளன. தமிழ்நாட்டின் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில், வரும் மார்ச் 31ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த வணிகத் திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பயிற்சியில் உருவாக்கப்பட்ட இசைக்குழுவினர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியால் அரங்கமே அதிர்ந்தது..

நிகழ்ச்சியின் நிறைவாக கண்கவர் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டன.

2015ம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற கண்காட்சிக்குப் பின் இந்த அளவுக்கு பிரமாண்டமாக வர்த்தகக் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments