இன்றைய ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

0 2259

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்திலும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி 4 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில், 6 இடத்திலும் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரண்டு அணிகளுக்குமே இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments