தன்னிகற்ற நடிப்பால் சிகரம் தொட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று!

0 3860

நடிகர் சிவாஜிகணேசனுக்கு இன்று 94-வது பிறந்த நாள்! உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்ட, நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் பிறந்து, கணேசன் என்ற பெயருடன் சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து, அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் நடித்ததால், சிவாஜி கணேசனாய் மாறி, பராசக்தி மூலமாக திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் திலகம்.....

தமது முதல் படமான பராசக்தியில், கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.!

புராண பாத்திரங்களோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோ எதையும் ஏற்று நடிப்பதில் தன்னிகரற்று விளங்கியவர் சிவாஜி... திருமால், சிவபெருமான், அப்பர், நாரதர், வீரபாகு, கர்ணன் போன்ற வேடங்கள் மிகப் பொருத்தமாக அவருக்கு அமைந்திருந்தன.

வீரபாண்டிய கட்டபொம்மன் , வ.உ.சிதம்பரனார், பகத்சிங், கொடிகாத்தகுமரன், பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளை தன்னுடைய நடிப்பால் மக்கள் மனதில் விதைத்த வித்தகர் செவாலியே சிவாஜி கணேசன்

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான சிவாஜி படங்கள் தான் எத்தனை எத்தனை! தந்தையாக, அண்ணனாக, குடும்பத் தலைவனாக, நண்பனாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் நடிகர் திலகம்...

அதிகப்படியான நடிப்பை மட்டுமல்ல, யதார்த்தமான நடிப்பையும் தன்னால் வழங்க இயலும் என்று கலை ரசிகர்களுக்கு முதல் மரியாதை கொடுத்தார்

50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்தபோதும் சரி, எண்ணற்ற இயக்குநர்கள் இயக்கியபோதும் சரி.. கடைசிப் படம் வரை தனது தனித்தன்மையை தக்க வைத்துக் கொண்டவர் சிவாஜி...

தாதாசாகேப் பால்கே, பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது மிகையல்ல.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments