அணில்ன்னா ஆளாளுக்கு இளக்காரமா போச்சா..? 10 பனைமரம் க்ளோஸ்..!

0 10001

பனைமரத்தில் தங்கி இருந்து அணில்கள் தனது வயலில் விளையும் விளைச்சலை நாசம் செய்வதாகக் காரணம் கூறி, 10 பனைமரங்களை வெட்டிய விவசாயி மீது எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தமிழகத்தில் பனைமரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி அமலில் இருக்கும் நிலையில், 10 பனைமரங்களை பொக்லைன் உதவியுடன் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, அணில்கள் தொல்லையால் அகற்றியதாக பழி போட்ட தாமரை செல்வன் இவர்தான்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் . இவர் தனது விவசாய நிலத்தில் கம்பு, சோளம்,மிளகாய், மல்லி, கேழ்வரகு ஆகியவற்றை பயிரிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விவசாய பணிகள் மும்முரமாக விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமரைச்செல்வன் தனது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள, பொறம்போக்கு நீரோடை கரையில் அமைந்துள்ள 10 பனை மரங்களை ஜேசிபி வாகனங்களை வைத்து வேரோடு பிடுங்கி சாய்த்தார்.

தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தனது வயலில் விளைகின்ற தானியங்களை அருகில் உள்ள பனைமரங்களில் கூடுகட்டி வசிக்கின்ற அணில்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேட்டையாடுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டதாகவும், எனவே இந்த முறை அணில்களின் தொல்லை இருக்கக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே பனை மரங்களை பிடுங்கியதாகத் தெரிவித்தார்.

விதியை மீறி பனைமரங்கள் வெட்டப்படுவது தொடர்வதை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments