காவலர் நினைவு நாள் பலி கொடுக்கப்பட்ட அடங்கா மனைவி..! 21 இடங்களில் கத்திக்குத்து

0 5522

திருச்செந்தூர் அருகே உளவுப்பிரிவு காவலர் தற்கொலை செய்து கொண்டதற்குப் பழிக்கு பழியாக, அவரது மனைவி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரை மாய்த்துக் கொண்டவரின் நினைவுநாளுக்காக மனைவி பலி கொடுக்கப்பட்ட திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செல்வ முருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

38 வயதான அவரது மனைவி அருணா உடன்குடி -பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்த நிலையில், வீட்டுக் கழிவறையில் கழுத்து அறுபட்டும் கத்திக் குத்து காயங்களுடனும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருணாவின் உடலில் 21 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன.

உயிரிழந்த தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் நினைவு நாளுக்கு முந்தையதினம் அவரது மனைவி அருணா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தை பார்வையிட வந்த திருச்செந்தூர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், அதே இடத்திற்கு ஏற்கனவே வந்திருப்பதாக கூறியதோடு தலைமைக் காவலர் செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

அருணாவின் சடலத்தைக் கைப்பற்றிய குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்வ முருகனின் தற்கொலைக்கு பழிக்கு பழியாக அருணா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மனைவி அருணாவின் நடத்தையால் உண்டான பிரச்சனையே செல்வமுருகன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்று கூறப்படுகின்றது, செல்வமுருகனின் தற்கொலைக்கு பின்னரும் அடங்க மறுத்த அருணா, தனது நடத்தையை திருத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக அருணாவின் நடவடிக்கைகளை கண்காணித்த , செல்வ முருகனின் அக்காள் மகன் சம்பவத்தன்று அருணாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது மாமா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்று கேட்டு அருணாவிடம் தகராறு செய்த அவர், அருணாவின் தாயை வீட்டுக்கு வெளியே போகச்சொல்லி கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

அதன் பின்னர் அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அடங்கிய சிறிது நேரத்தில் அந்த இளைஞர் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது, தனது மாமா செல்வமுருகனின் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி அருணா என்பது தெரியவந்ததால், அவரது நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக கொலைசெய்துவிட்டு அந்தநபர் தப்பிச்சென்றுள்ளதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், கொலையாளியைத் தேடிவருகின்றனர்.

கொலை சம்பவத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரை , பட்டப்பகலில் அரங்கேறிய இந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments